Wednesday, November 19, 2025

உள்நாடு பிரபல உணவகமொன்றின் சாப்பாட்டில் புழுக்கள் கட்டுநாயக்கா பகுதியில் சம்பவம்!!






கொழும்பு கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று(19) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மட்டக்களப்பில் உள்ள  ஒரு சமூக  அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்  விமான நிலையத்துக்கு சென்று திரும்பி வரும்பொழுது  மதிய உணவுக்காக குறித்த உணவகத்தில் இருந்து உணவுகளை  சாப்பிடும் போது, கோழி இறைச்சி பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  ஊடக பிரிவுக்கு தெரிவித் திருந்தனர்.


உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 





 

Sunday, November 9, 2025

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ்கள் பிரதி அமைச்சரினால் வழங்கி வைப்பு!!







மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய  மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வானது பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ.ரவிந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம் பெற்றது. 


பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக

கலந்துகொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு  நிகழ்வை சிறப்பித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.


ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கற்கை நெறிகளை பூத்தி செய்த நபர்களுக்கே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சில பயனாளிகளுக்கு பணைசார் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கான பெறுமதிவாய்ந்த உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பத்தினர்

பனை சார் கைப்பணிப் பொருட்கள் மற்றும் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்து வெடிநாடுகளிற்கு ஏற்றுமதி  செய்து வருகின்றனர்.


மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகள், பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சுற்றுலா துறைக்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, November 2, 2025

மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு திடிர் கள விஜயம்! ஞா.ஶ்ரீநேசன் எம்.பி




 

மட்டக்களப்பு - வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு கள விஜயத்தை இன்று (03) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மேற்கொண்டார். 


குறித்த கள விஜத்தில் பிரதேச சபை தவிசார் த.கோபலப்பள்ளை, பிரதிதவிசாளர் த.டிசாந் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் பிரதேச சபை எல்லைக்குள் உட்டபடுத்தப்பட்ட கிராமங்கள் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 


மேலும் எதிர்வரும் காலங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் முன் ஆயத்தங்கள், வடிகால் துப்பரவு செய்வது தொடர்பாகவும், பிரதேச மக்கள் இலகுவாக செல்லுவதற்கும் வீதிகளுக்கான பெயர் பதாதைகள் பிரதேச சபை ஊடாக அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதேச சபைக்குட்பட்ட சில எல்லை புர வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கையளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்



மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் யார்?





 


மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்றில் உள்ள கால்நடை வளர்ப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் உள்ள மேசக்கல் மேய்ச்சல் தரைப் பிரதேசத்திற்கு( 01) பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் சென்றிருந்தார்.


அவ்வேளையில் சுமார் 50 பண்ணையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார்கள்.

அந்த வகையில் மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் என்பவற்றால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை குறைந்து கொண்டு செல்வதைக் குறிப்பிட்டனர்.


மேலும் தமது மேய்ச்சல் தரை நிலம் பாதுகாக்கப்படாவிட்டால் தமது கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் போய் விடும் என்பதைக் கூறியதுடன்,

எனவே சட்ட விரோதமாக காடுகளை அழிப்பதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.


இது தொடர்பாக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வனவளத் திணைக்கள பிராந்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறினார்.


அவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனைக் கூறியிருந்தனர்.


அத்தோடு காடு அழிப்புகள் தொடர்பாக நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிடுவதற்காக காட்டு வழியினூடாகச் சென்று அவதானிக்கப்பட்டது.


இதன் போது காடு அழிப்புகள் தொடர்பாக சில பகுதிகளைப் பார்வையிட்டார், உரிய அதிகாரிகளிடம் இவ்விடயத்தை எடுத்துக் கூறியிருந்தார் .


அவர்கள் உடனடியாக அவ்விடத்திற்கு கிராம உத்தியோகத்தர், வனஜீவராசி கள உத்தியோகத்தர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக கூறினார்.


மட்டக்களப்பின் இயற்கை வளமான காடு அழிக்கப்பட்டால் காட்டு யானைகள் கிராமங்களை நோக்கியும், வருவதைக் தடுக்க முடியாமல் போய் விடும் இவ்விடயம் தொடர்பாக சில பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.


மேலும் சட்டப்படி பண்ணையாளர்கள் ,விவசாயிகள் நடந்த கொள்ளும்படி ஆலோசனை பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது


உரிய நேரத்தில் கடிதங்கள் மக்களின் கையில் கிடைக்காத பின்னணி என்ன?

 






தபால் ஊழியர் இன்மையால் அல்லலுறும் பன்குடாவெளி,இலுப்படிச்சேனை,பாலர்சேனை,காயன்குடா,கொடுவாமடு, தம்பானம்வெளி,மயிலவெட்டுவான்,மாவடிஓடை, பாலர்சேனை போன்ற கிராமங்களுக்கு உரிய நேரத்தில் கடிதங்கள் சென்றடைவதில்லை இரண்டு பேர் வேலை செய்த அலுவலகத்தில் தற்போது ஒருவரே கடமை புரிகின்றார் 8 பாடசாலைகள் உள்ளது நான்கு ஆர்மி கேம் உள்ளது ஆயுள்வேதவைத்தியசாலை உள்ளது கமநல சேவை நிலையம் உள்ளது மூன்று நூலகம் உள்ளது வனவள அதிகாரி அலுவலகம் இது அனைத்துக்கும் ஒருவரே கடிதம் ஒப்படைக்க வேண்டும் காலாவதியான கடிதங்களே இவர்களின் கைகளில் கிடைக்கின்றன.



பன்குடாவெளி உப தபால் அலுவலகத்தில் இரண்டு பேர் தபால் ஊழியர்களாக கடமை புரிந்து வந்தனர் தற்போது ஒருவரே கடமை புரிகின்றான்ர் மக்களுக்கு உரிய நேரத்தில் கடிதம் கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டை மக்கள் ஊடகத்திற்கு தெரிவித்தனர் 



Thursday, October 30, 2025

விளையாட்டுத் துறை சார் உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி!!








(ஜெபி ஜனார்த்)

கொழும்பு  தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்  மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் விளையாட்டுத் துறை சார் உத்தியோகத்தர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்தி  பயிற்சி நெறி நடைபெற்றது.


 25திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையாக 04 நாட்களில் முதலாவது நாள் தைக்வோன்டோ(Takewondo) விளையாட்டு தொடர்பான பயிற்சியும் இரண்டாம் நாள் தடகள(Athletic) விளையாட்டுக்கான பயிற்சிகளும் மூன்றாம் நாள் கபடி விளையாட்டுக்கான பயிற்சிகளும் நான்காம் நாள் பளு தூக்குதல் (weight lifting) விளையாட்டுக்கான பயிற்சியும் நடைபெற்றது.


இதன் போது இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயிலுனர்கள்  பல்வேறு பட்ட  விடயங்களை முன்வைத்ததில் அதிகளவான நேரம் வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு ஒரு சில விளையாட்டுக்கள் மாத்திரம் இன்றி அனைத்து விளையாட்டுகளுக்குமான நீண்ட நாள் பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும், ஏற்பாட்டுக் குழுவினரிடம் இதன் போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.


இப்பயிற்சி நெறிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான கட்டட தொகுதியில் நடைபெற்றதுடன், திறன் விருத்தி பயிற்சி நெறியில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் P. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்ட செயலாளர் G.பிரணவன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் M.Y.ஆதம்,  தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவன விரிவுரையாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஜீ.எல்.சஜித் ஜயலால், ஆர்.டி.ஏ.ஜீவானந்த, கே.எச்.கின்ஸ்லி குணதிலக, ஆர்.பி.பி.பிரசண்ண, எம்.ரொமேஸ் ரத்னசேகர, எம்.எல்.எம்.சஜ்னாஸ், மற்றும் எச்.ஏ.கலபனி ஆகியோர் கலந்து கொண்டதுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 29, 2025

தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் !!

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது  சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது





இதன்போது ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின்  உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட  கட்சியின் முக்கியஸ்தர்கள்   மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இதேவேளை  இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமிய பவானில் விசேட பூஜை வழிப்பாடுகளும் இடம்பெற்றது.

Monday, October 27, 2025

பாசிக்குடா ஸ்ரீ முனை முருகன் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி!





 


பாசிக்குடா ஸ்ரீ முனை முருகன் ஆலயத்தில் 3:30 மணியளவில்   முதல் சூரசம்ஹார நடைபெற்றது 

 சூர சம்ஹாரம் முடிவடைந்து சுவாமிக்கு  பட்டுச்சாத்தி விசேட பூஜை நடைபெற்றது



முருகப்பெருமான் இரு கரங்களினால் பராசக்தி கொடுத்த வேலுடன் சென்று முதலில் சிங்கமுகன், தாரகன், அவர்களின் சேனைகள் அனைத்தையும் ஐந்து நாட்களில் அழித்தார் .


பின்பு ஆறாம் நாள் சூரபத்மன் மாத்திரமே  இருந்தான் அவன் முருகன் வேலுக்கு தப்பித்து மாயாவியாக மறைந்து மாமரமாக மாறினான் 


முருகன் தனது வேல் மூலம் மாமரத்தை இரண்டாகப்பிளந்து  மாமரம் மயிலாகவும், சேவலாகவும் மாறியதை  முருகன் மயிலை தனது வாகனமாகவும் 

சேவலை தனது கொடியின் சின்னமாக மாற்றிக் கொண்டு வெற்றி முழக்கத்தோடு வளம் வந்தார்


இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் முருகப்பெருமானை நினைத்து பக்த அடியார்கள் ஆறு நாள் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டித்து சிறப்பம்சமாகும் பாசிக்குடா ஸ்ரீ முனை முருகனை 

தரிசிக்க மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்துபக்த  அடியார்கள் வருகை தந்திருந்தனர்.

Tuesday, October 21, 2025

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் ஒருவர் பலி!


மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலே  பலியானதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் பாவற்கொடிச்சேனை, பழங்குடியிருப்பு மடு எனும் இடத்தில் திங்கள்கிழமை (20) இரவு  இடம் பெற்றதாக தெரியவருகிறது.


பாவற்கொடிச்சேனை, கண்ணகி நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.

இதேவேளை இவ்விபத்து சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Friday, October 17, 2025

கிழக்கு மாகாண சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த சுற்றுப்போட்டி!!






கிழக்கு மாகாண சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தினல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மட்டக்களப்பு வெவர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஜப்பான் கராத்தே டு சோடோகான் ஸ்டடி அசோசியேஷன் சார்பில் பங்குபற்றிய மாணவர்கள் மொத்தமாக 28 தங்க பதக்கங்கள், 17 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 6 வெங்கல பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 51 பதக்கங்களை பெற்றிருந்தார்கள். போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பயிற்சிகளை JKSSA கழகத்தின் பிரதம போதானாசிரியர் கியோஷி H.M. விஜயகுமார அவர்களின் வழிகாட்டலில் சிரேஷ்ட போதனாசிரியர்களான M. நகராஜா, T. சாதானந்தகுமார் மற்றும் S.மதுர்சனி, அக்சயன் ஆகிய பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 8, 2025

எல்லே போட்டியில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச கழகங்கள் சம்பியன் .


மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக விளையாட்டு விழா எல்லே போட்டியில் ஏறாவூரப்பற்று செங்கலடி பிரதேச கழகங்கள் சம்பியன் .

.35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கபோடி சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் 05 ஆண்கள் அணிகளுயும் 05 மகளீர் அணிகளும் கலந்துகொண்டன.

இறுதிப்போட்டியில் ஏறாவூரப்பற்று செங்கலடி பிரதேச இளைஞர் கழகம் சார்பில் பங்கு பற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக மகளீர் அணியும் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக ஆண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப்போட்டியில் ஏறாவூர்ப்பற்று சார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் கோறளைப்பற்று தெற்கு சார்பில் முறக்கொட்டாஞ்சேனை இளைஞர் கழகங்களிடையே நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெத்தாடிய முறக்கொட்டாஞ்சேனை இளைஞர் கழக அணி 04 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஓட்டங்களின் அடிப்படையில் 06 ஓட்டங்களால் செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வெற்றி பெற்று 2025ம் ஆண்டின் சம்பியபனது.

இறுதிப்போட்டியில் ஆண்கள் கழகம் சார்பில் களுவன்கேணி பாரதி இளைஞர் களக அணியும் ஏறாவூர் அகமட் பரீட் இளைஞர் கழக அணியும் மோதின இதில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


Sunday, October 5, 2025

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
இந்த எச்சரிக்கை ஞாயிறு (05) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கம் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

விபத்தில் சிக்சிய இளம் காதலர்கள் - காதலி பலி


பின்னவல பொலிஸ் பிரிவில் ஹட்டன்-பலாங்கொடை வீதியில் நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடயில் இருந்து பின்னவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது காதலியும் பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி காதலி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்

அரநாயக்கவைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.




நடிகை சிம்ரன் கொழும்பை வந்தடைந்தார்

 


பிரமாண்டமான மணப்பெண் போட்டி மற்றும் பட்டமளிப்பு விழா -2025 பங்கேற்பதற்காக, நடிகை சிம்ரன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாட்டை வந்தடைந்தார்.


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று 04.10.2025 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றுவருகின்றது.

இப்பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தமாக உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு முடித்தவர்கள் என மொத்தமாக 1966 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் இன்றைய இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இப்பட்டமளிப்பு விழா இன்றும் நாளையுமாக இரண்டு நாட்களும் தலா மூன்று அமர்வுகளாக நடைபெறவுள்ளன.

இதன்போது பேராசிரியர் சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு வரலாற்றுத்துறைக்கான கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளின் முதலாவது அமர்வின் போது 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மூன்றாவது அமர்களின் போது முறையே 345 மற்றும் 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும் விழாவின் இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.